2025 மே 21, புதன்கிழமை

டொலர்களுக்கு அடிமையாகியுள்ள எதிர்க்கட்சிக்கு நாட்டை ஆளும் வாய்ப்பு கிட்டாது: ரஞ்சித்

Menaka Mookandi   / 2013 ஏப்ரல் 27 , மு.ப. 09:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.சீ.சபூர்தீன்   
             
தாய்நாட்டிற்கு எதிராக மேற்கொள்ளப்படும் சர்வதேச சதித்திட்டங்களின் டொலர்களுக்கு அடிமைப்பட்டுள்ள எதிர்கட்சியினருக்கு இந்நாட்டை மீண்டும் ஆட்சி செய்யும் வாய்ப்புக் கிட்டாது என வடமத்திய மாகாண முதலமைச்சர் ரஞ்சித் சமரகோன் தெரிவித்தார்.

அநுராதபுரத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
சர்வதேச அழுத்தங்களுக்கு ஜனாதிபதி ஒருபோதும் அடிபணியமாட்டார். இந்நாட்டின் சுதந்திரத்தையும் கௌரவத்தையும் அவர் தொடர்ந்து பாதுகாப்பார்.

தொடர்ச்சியாகத் தேர்தல்களில் தோல்வியுற்று வரும் எதிர்கட்சி மக்கள் மத்தியிலிலருந்து தூரமாகிச் செல்வதால் மக்களிடம் பொய்யான கருத்துக்களைக்கூறி வருகின்றனர் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X