2025 மே 21, புதன்கிழமை

கற்பிட்டி பிரதேச சபைத்தலைவர் குறித்து முதலமைச்சரிடம் முறைப்பாடு

Kanagaraj   / 2013 ஏப்ரல் 29 , பி.ப. 06:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.என்.எம். ஹிஜாஸ்

சபைக்கும் அறிவிக்காது, தான் நாடு திரும்பும் வரையிலும் பதில் தலைவர் ஒருவரை நியமிக்காமல் வெளிநாட்டுக்கு சென்று திரும்பிய கற்பிட்டி பிரதேச சபைத்தலைவர் வெளிநாடு சென்றமை தொடர்பில் வடமேல் மாகாண முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக கற்பிட்டி பிரதேச சபை உறுப்பினர்கள் தெரிவித்தனர்.

கற்பிட்டி பிரதேச சபைத்தலைவர் எம்.எச்.எம். மின்ஹாஜ் கடந்த புதன் கிழமை பதில் கடமையினை எவருக்கும் வழங்காது, சபைக்கும் தெரிவிக்காது வெளிநாடு சென்று கடந்த சனிக்கிழமை நாடு திரும்பியுள்ளார்.

இது தொடர்பில் ஆளும் கட்சியினை சேர்ந்த 04 உறுப்பினர்கள் ஒப்பமிட்டு முதலமைச்சருக்கு எழுத்து மூலம் தனக்கு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

கற்பிட்டி பிரதேச சபையில் ஆளும் கட்சியினை சேர்ந்த 09 உறுப்பினர்களும்; முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் ஒருவரும், ஐ.தே.கட்சி உறுப்பினர்கள் 03 பேரும், சுயேட்சை குழு உறுப்பினர் ஒருவரும் உள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். 

You May Also Like

  Comments - 0

  • m Tuesday, 30 April 2013 03:48 AM

    சமூகப் பொறுப்பற்ற அரசியல்வாதிகளை அரசியலில் இருந்து ஓரம் கட்ட மக்கள் முன்வர தயங்கக்கூடாது.

    Reply : 0       0

    q, Friday, 03 May 2013 06:02 PM

    உண்மை இல்லை

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X