2026 பெப்ரவரி 03, செவ்வாய்க்கிழமை

வடமத்திய மாகாண காணி பிரச்சினைகளுக்கு தீர்வு

Menaka Mookandi   / 2013 மே 04 , மு.ப. 07:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.சீ.சபூர்தீன்

வடமத்திய மாகாணத்தில் நிலவும் காணிப் பிரச்சினைகளுக்கு துரித கதியில் தீர்வு காணும் நோக்கில் காணிகள் தொடர்பான விபரங்களைச் சேகரிக்குமாறு வடமத்திய மாகாண முதலமைச்சர் ரஞ்சித் சமரகோன் சகல பிரதேச செயலாளர்களுக்கும் பணிப்புரை விடுத்துள்ளார்.

கிராமப் புறங்களைவிட நகர்ப்புறங்களிலேயே அதிகளவில் காணிப் பிரச்சினைகள் உள்ளன. எனவே கட்டம் கட்டமாக காணிப் பிரச்சினைகளுக்குத் தீர்வு கண்டு உரிமையாளர்களுக்கு உறுதிப் பத்திரங்கள் வழங்க ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

பிரதேச செயலாளர்களிடமிருந்து காணி விபரங்கள் கிடைக்கப்பெற்றவுடன் இரண்டு மாதங்களுக்குள் உறுதிப் பத்திரங்களை வழங்கவும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .