2025 மே 21, புதன்கிழமை

புத்தளம் பிரதேச சபையின் தலைவராக நிமால் பமுனு ஆராய்ச்சி நியமனம்?

Super User   / 2013 மே 06 , மு.ப. 07:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எஸ்.எப்.ஜெஸீரா

புத்தளம் பிரதேச சபையின் தலைவராக நிமால் பமுனு ஆராய்ச்சி நியமிக்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

புத்தளம் பிரதேச சபையின் தலைவர் திலுக் சுசிர பதிரகே அண்மையில் சிலாபம், தெதுரு ஓயா பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் உயிரிழந்தார். இதனால் ஏற்பட்ட வெற்றிடத்திற்கே நிமால் பமுனு ஆராய்ச்சி நியமிக்கப்படவுள்ளார்.

கடந்த  2011ஆம் ஆண்டு இடம்பெற்ற பிரதேச சபைத் தேர்தலில் ஆளும் கட்சி சார்பில் போட்டியிட்ட நிமால் பமுனு ஆராய்ச்சி 3,756 விருப்பு வாக்குகளைப் பெற்று இரண்டாவதாக தெரிவானதுடன், புத்தளம் பிரதேச சபையின் பிரதித் தலைவராகவும் தெரிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X