2025 மே 20, செவ்வாய்க்கிழமை

தென்னங்கன்றுகள் வழங்கி வைப்பு

Kogilavani   / 2013 ஜூன் 01 , மு.ப. 04:06 - 0     - {{hitsCtrl.values.hits}}


எம்.என்.எம். ஹிஜாஸ்


முந்தல் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளிலுள்ள மக்களுக்கு 'கப்றுக' வேலைத்திட்டத்தின் கீழ் தென்னங்கன்றுகள் வழங்கும் நிகழ்வு
நேற்று வெள்ளிக்கிழமை கட்டைக்காடு, பூனைப்பிட்டி ஆகிய பிரதேசஙகளில்; நடைப்பெற்றன.

இதன்போது பிரதேச மக்களுக்கு புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் விக்டர் அன்டனி பெரேரா, வடமேல் மாகாண சபை உறுப்பினர் ஏ.எச்.எம்.ரியாஸ் ஆகியோர் தென்னங்கன்றுகளினை வழங்கினர்.

ஒரு வீட்டுக்கு 5 தென்னங்கன்றுகள் வீதம் இதன்போது பகிர்ந்தளிக்கப்பட்டது.

கப்றுக வேலைத்திட்டத்தின் செயலாளர் அன்டனி மார்யுஸ் பெர்ணான்டோ (சின்ன மணி) தலைமையில் நடைப்பெற்ற இந்நிகழ்வில் தென்னை அபிவிருத்தி அதிகாரி உட்பட பலர் கலந்துகொண்டனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X