2025 ஜூலை 07, திங்கட்கிழமை

மாணவியை கர்ப்பிணியாக்கிய மச்சான் தலைமறைவு

Kanagaraj   / 2013 ஜூன் 03 , பி.ப. 03:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.என்.எம். ஹிஜாஸ்

15 வயது மாணவியான சிறுமியை கடத்திச்சென்று வல்லுறவுக்குட்படுத்தி கர்ப்பிணியாக்கிய குறித்த சிறுமியின் மச்சானை பொலிஸார் தேடி வலைவிரித்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட சிறுமியின் அக்காவின் கணவரையே தேடிவருவதாக கற்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபர் குறித்த சிறுமியை வீட்டுக்குதெரியாமல் கடந்த 28 ஆம் திகதி ஹட்டனுக்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு தனது நண்பரின் வீட்டில் ஜூன் மாதம் 01 ஆம் திகதி வரை தங்கவைத்தே இந்த குற்றத்தைபுரிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதன் பின்னர் குறித்த சிறுமியை அழைத்துவந்த சந்தேகநபர் அவரை வீட்டில் விட்டுவிட்டு தலைமறைவாகியுள்ளார்.வீட்டுக்கு வந்த சிறுமி தனக்கு  நடந்தவற்றை பெற்றோரிடம் தெரிவித்ததையடுத்து இதுதொடர்பில்  கற்பிட்டி பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டதுடன் சிறுமியும் வைத்திய பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டார்.

குறித்தசிறுமி வல்லுறவுக்குட்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கர்ப்பமடைந்துள்ளதாகவும் வைத்திய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையிலேயே தலைமறைவாகியுள்ள சந்தேநபரான சிறுமியின் அக்காவின் கணவரை தேடி வலைவிரித்துள்ளதாக கற்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .