2025 மே 20, செவ்வாய்க்கிழமை

விபத்தில் படையினர் இருவர் பலி: ஒருவர் காயம்

Kogilavani   / 2013 ஜூன் 15 , மு.ப. 03:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.என்.எம். ஹிஜாஸ், ஹிரான் பிரியங்கர 

புத்தளம், தபோவ பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற விபத்தில், இராணுவத்தில் கடமையாற்றும் படைவீரர்கள் இருவர் உயிரிழந்துள்ளதுடன் ஒருவர் காயமடைந்த நிலையில் புத்தளம் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இராணுவத்தைச் சேர்ந்த கேணல் எச்.பி.ஆர்.ரவிந்திர ஹந்துன்பத்திரன மற்றும் கொப்ரல் சஞ்சிவ குமார ஆகியோரே இவ்விபத்தில் உயிரிழந்துள்ளனர்.

விபத்தில் பலத்த காயமடைந்த நிலையில் மேஜர் ஜெயசுந்தர புத்தளம் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவர்கள் பயணித்த வாகனம் கிளிநொச்சி படை முகாமிலிருந்து கனேமுல்ல பகுதிக்கு செல்லும்போதே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்து தொடர்பில் கருவெலகஸ்வௌ பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X