2025 ஓகஸ்ட் 23, சனிக்கிழமை

பிணை கிடைத்ததும் சிதறுதேங்காய் உடைத்து நேர்த்திக்கடன்

Kanagaraj   / 2013 ஜூன் 27 , மு.ப. 06:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

நவகத்தேகம பாடசாலை ஆசிரியையை முழந்தாளிடவைத்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்ட வடமேல் மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் ஆனந்த சரத்குமார சிதறுதேங்காய் உடைத்து நேர்த்திக்கடன் செலுத்தியுள்ளதுடன் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டுள்ளார்.

பிணையில் விடுவிக்கப்பட்ட அவர், தனது ஆதரவாளர்களுடன் ஆனமடுவ நகரத்தை வலம் வந்ததுடன் அய்யநாயக்க தேவாலயத்திற்கு சென்று சிதறுதேங்காய் உடைத்து நேர்த்திக்கடன் செலுத்தியுள்ளார்.

இந்நிலையில், இலங்கை ஆசிரியர் சங்கம் மற்றும் இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் ஆகியன ஆனமடுவ நீதிமன்றத்திலிலிருந்து நகரத்தை நோக்கிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்.

பொலிஸார் மற்றும் கலகம் தடுக்கும் பொலிஸார் இணைந்து வீதியை மறித்து ஆர்ப்பாட்டகாரர்களை நகருக்குள் செல்லவிடாமல் தடுத்துள்ளனர். இதனால், அங்கு பெரும் பதற்றம் நிலவுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

தொடர்புடைய செய்தி:

முழந்தாளிடவைத்த முன்னாள் உறுப்பினருக்கு பிணை

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X