2025 ஓகஸ்ட் 23, சனிக்கிழமை

வாகன விபத்தில் இளைஞர் உயிரிழப்பு

Menaka Mookandi   / 2013 ஜூன் 27 , பி.ப. 12:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.முஸப்பிர்

ஆனமடு புத்தளம் பிரதான வீதியில் இடம்பெற்ற வாக விபத்தொன்றில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக ஆனமடு பொலிஸார் தெரிவித்தனர். 

ஆனமடு புத்தளம் வீதியின் தோணிகலை எனும் பிரதேசத்திலேயே நேற்று இரவு  மோட்டார் சைக்கிள் ஒன்று லொறி ஒன்றுடன் மோதியே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

தனியார் நிறுவனம் ஒன்றில் விற்பனை பிரதிநிதியாகக் கடமையாற்றும் ரஸ்நாயகபுர பஹல ஒட்டுப்பள்ளம் எனும் பிரதேசத்தைச் சேர்ந்த 25 வயது இளைஞர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்தவராவார்.

இவர் தனது மோட்டார் பைசிகளில் பயணித்துக் கொண்டிருந்த போது வீதியால் வந்த லொறி ஒன்றுடன் மோதியுள்ளது.

இதனையடுத்து படுகாயமடைந்த மோட்டார் பைசிகளில் பயணித்தவரை பிரதேசவாசிகள் உடனடியாக அங்கிருந்து ஆனமடு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதித்த போதும் அங்கு அவர் உயிரிழந்துள்ளார்.

விபத்துடன் தொடர்புடைய லொறிச் சாரதியைக் கைது செய்துள்ள ஆனமடு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X