2025 மே 20, செவ்வாய்க்கிழமை

சமூர்த்தி உத்தியோகத்தரின் மோட்டார் சைக்கிளுக்கு தீவைப்பு

Kogilavani   / 2013 ஜூன் 28 , மு.ப. 09:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்

சேருநுவர பொலிஸ் பிரிவிலுள்ள விநாயகபுரத்தில் சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் ஒருவரின் மோட்டார் சைக்கிளுக்கு தீவைக்கப்பட்ட சம்பவம் பற்றி முறையிடப்பட்டுள்ளதாக சேருநுவர பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் நேற்று வியாழக்கிழமை இரவு இடம்பெற்றுள்ளதாக  தெரிவிக்கப்படுகின்றது.

வெருகல் பிரதேச செயலக சமூர்த்தி மகா சங்கத்தில் பணியாற்றும் சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தரான இலட்சுமணன் பரமசிவலிங்கம் என்பவரது மோட்டார் சைக்கிளே இவ்வாறு எரியூட்டப்பட்டுள்ளது.

வீதியோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் நூறு மீற்றர் தூரமளவிற்;கு இழுத்துச் செல்லப்பட்டு தீவைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் குறித்து முறைப்பாடு செய்யப்பட்டதின் பின்னர் இன்று காலை ஸ்தலத்திற்கு விரைந்த சேருநுவர பொலிஸார் எரியூட்டப்பட்ட மோட்டார் சைக்கிளை பார்வையிட்டதுடன் அதனைப் பொலிஸ் நிலையத்திற்கு எடுத்துச் சென்றுள்ளதோடு தீவிர விசாரணைகளிலும் ஈடுபட்டுள்ளனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X