2025 ஓகஸ்ட் 23, சனிக்கிழமை

'மேர்வினுக்காக பத்திரகாளியிடம் மன்றாட்டம்'

Kanagaraj   / 2013 ஜூன் 28 , மு.ப. 10:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொதுமக்கள் உறவுகள் மற்றும் பொது விவகாரங்கள் அமைச்சர் மேர்வின் சில்வா மற்றும் அவருடைய மகன் மாலக்க சில்வாவிக்காக அவர்களுடைய ஆதரவாளர்கள் முன்னேஸ்வரம் பத்திரகாளியம்மன் கோவிலில் விசேட பூஜை வழிபாடுகளில் ஈடுபட்டனர்.

அமைச்சருக்கும் அவருடைய மகனுக்கும் எதிராக சூழ்ச்சிகளை செய்ததாக கூறப்படுகின்றவர்களை தண்டிக்குமாறு அவர்களுடைய ஆதரவாளர்கள் மன்றாடியதுடன் சிதறுதேங்காயும் உடைத்துள்ளனர்.

களனி பெண்கள் அமைப்பைச் சேர்ந்தவர்களே இன்று வெள்ளிக்கிழமை இந்த பூஜை வழிபாடுகளில் ஈடுபட்டுள்ளனர்.

முன்னேஸ்வரம் காளி கோவிலில் நடத்தப்படவிருந்த பலி பூஜைக்காக கொண்டுசெல்லப்பட்ட கோழிகள் மற்றும் ஆடுகளை அமைச்சர் மேர்வின் சில்வா தலைமையிலான குழுவினர் 2011 ஆம் ஆண்டு செப்டெம்பர் 11ஆம் திகதி அபகரித்துச் சென்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

  Comments - 0

  • AMBI. Friday, 28 June 2013 03:44 PM

    அம்பி... உங்கட நோயை குணமாக்க வேண்டவில்லையா...?

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X