2025 மே 15, வியாழக்கிழமை

விபத்தில் ஒருவர் பலி; கெப் வாகனம் தப்பியோட்டம்

Kanagaraj   / 2013 ஓகஸ்ட் 10 , மு.ப. 03:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம். எஸ். முஸப்பிர்

கல்பிட்டி வீதியின் நரக்கலி பிரதேசத்தில் நேற்று வெள்ளிக்கிழமை மாலை இடம்பெற்ற வாகன விபத்தொன்றில் ஒருவர் உயிரிழந்துள்ளதோடு மற்றொருவர் காயங்களுக்குள்ளாகி புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கல்பிட்டி பொலிசார் தெரிவித்தனர்.

கெப் ரக வாகனம் ஒன்று மோட்டார் சைக்கிளுடன் மோதியே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

இவ்விபத்தில் மோட்டார் சைக்களில் பயணித்த ஒருவரே உயிரிழந்துள்ளதுடன் அதில் பயணித்த மற்றொருவர் காயங்களுக்குள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த விபத்துடன் தொடர்புடைய கெப் ரக வாகனம் தப்பிச் சென்றுள்ளதுடன் கல்பிட்டி பொலிசார் குறித்த கெப் வாகனத்தைத் தேடி கைப்பற்றுவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாகத் தெரிவித்தனர்.
 



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .