2025 மே 15, வியாழக்கிழமை

அபிவிருத்தித் திட்டங்கள் பொதுமக்களிடம் கையளிப்பு

Suganthini Ratnam   / 2013 ஓகஸ்ட் 11 , மு.ப. 09:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.என்.எம்.ஹிஜாஸ்

புத்தளம் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பொத்துவில்லு பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு அபிவிருத்தித் திட்டங்கள் நேற்று சனிக்கிழமை பொதுமக்களிடம் கையளிக்கப்பட்டன.

சுமார் 85 இலட்சம் ரூபா செலவில் மேற்கொள்ளப்பட்ட பிரதேச மக்களுக்கான குடிநீர் விநியோக திட்டம், கமநெகும திட்டத்தின் கீழ்; நிர்மாணிக்கப்பட்ட 'சேவைகள் இல்லம்', பொத்துவில்லு – ஆமக்குழி வீதியில் அமைக்கப்பட்ட பாலம் என்பனவே பொதுமக்களிடம் கையளிக்கப்பட்டன.

இதேவேளை, தேசத்திற்கு மகுடம் கண்காட்சியை முன்னிட்டு பொத்துவில்லு பிரதேசத்தில் நடமாடும் சேவையும் நேற்று சனிக்கிழமை  நடைபெற்றது.

இதன்போது வறுமைக் கோட்டிற்கு கீழுள்ள குடும்பங்களுக்கு வைத்தியப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதுடன்  மூக்குக் கண்ணாடிகள், தென்னங்கன்றுகள் என்பனவும் வழங்கப்பட்டன. 

இந்நிகழ்வுகளில் புத்தளம் தொகுதி சுதந்திரக் கட்சி அமைப்பாளரும் புத்தளம் நகரபிதாவுமான கே.ஏ.பாயிஸ், புத்தளம் பிரதேச சபை தலைவர் நிமல் பமுனு ஆராச்சி, புத்தளம் பிரதேச சபை உறுப்பினர் ஜே.சோமவீர, புத்தளம் பிரதேச செயலாளர் எம்.ஆர்.எம்.மலிக் உட்பட பலர் கலந்து கொண்டனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .