2025 மே 15, வியாழக்கிழமை

மறைந்த அமைச்சரின் சகோதரர் சடலமாக மீட்பு

Super User   / 2013 ஓகஸ்ட் 12 , மு.ப. 07:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஜுட் சமந்த

மறைந்த அமைச்சர் டி.எம்.தசநாயக்கவின் சகோதரர் (51 வயது) வீட்டுத் தோட்டத்திலிருந்து சடலமாக இன்று திங்கட்கிழமை அதிகாலை மீட்கப்பட்டுள்ளார்.

இரண்டு பிள்ளைகளின் தந்தையான இவர், ஆண்டிகம பிரதேசத்திலுள்ள தனது வீட்டின் தோட்டத்திலிருந்தே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இந்த சடலத்தை கண்ட உறவினர்கள் பொலிஸாரிற்கு அறிவித்துள்ளனர்.

பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளின்போது, குறித்த சடலத்திற்கு அருகில் கையடக்க தொலைபேசி மற்றும் ஒரு சோடி பாதணி ஆகியன மீட்கப்பட்டுள்ளன. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பல்லம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .