2025 மே 15, வியாழக்கிழமை

வாகனங்களில் தேர்தல் சுவரொட்டிகள்

Super User   / 2013 ஓகஸ்ட் 12 , மு.ப. 11:50 - 0     - {{hitsCtrl.values.hits}}


-மொஹொமட் ஆஸிக்


வட மேல் மாகாண சபை தேர்தலில் போட்டியிடும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் வேட்பாளர்கள் சட்டவிரோதமான முறையில் தமது சுவரொட்டிகளை வாகனங்களில் பொறித்துள்ளதாக தேர்தல் கன்காணிப்பில் ஈடுபட்டுள்ள கபே அமைப்பு தெரிவித்துள்ளது.

வட மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபருக்கு இது தொடர்பில் கடிதம் மூலம் அறிவித்துள்ளதாக கபேயின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கீர்த்தி தென்னகோன் தெரிவித்தார்.

குருணாகல் மாநகர சபை எல்லைக்குள்ளே இவ்வாறான சட்டவிரோத விளம்பரங்கள் அதிகமாக கானப்படுவதாகவும் அவர் தெரிவித்தார். பஸ்கள், வேன்கள மற்றும் முச்சக்கர வண்டி ஆகியவற்றிலேயே இந்த சுவரொட்டிகள் பயன்படுத்தப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .