2025 மே 15, வியாழக்கிழமை

தேர்தலில் போட்டியிடுபவர்களுக்கு ஆதரவு வழங்கும் கூட்டம்

Suganthini Ratnam   / 2013 ஓகஸ்ட் 13 , மு.ப. 03:15 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.முஸப்பிர்


வடமேல் மாகாண சபைத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் புத்தளம் மாவட்டத்தில் போட்டியிடும் ஏ.எச்.எம்.றியாஸ், எஸ்.ஆப்தீன் எஹியா, ஏ.எம்.கமறுதீன் ஆகியோருக்கு ஆதரவு வழங்கும் மக்கள் சந்திப்பு ஒன்று  நேற்று திங்கட்கிழமை மாலை நடைபெற்றது.

கடையாமோட்டையில் நடைபெற்ற இந்தச் சந்திப்பின்போது  ஹம்பாந்தோட்டை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் நாளைய இளைஞர் அமைப்பின் தலைவருமான நாமல் ராஜபக்ஷவும் கலந்துகொண்டார்.

இம்முறை ஆளும் கட்சி அதிக வாக்குகளுடன் வெற்றி பெற நீங்கள் ஒத்துழைக்க வேண்டும். இப்பிரதேச மக்கள் ஒன்றிணைந்து ஆளும் கட்சிக்கு வாக்களிக்க வேண்டும். அதன் மூலம் இப்பிரதேச அபிவிருத்தியில் நீங்கள் பங்குதாரர்களாகுங்கள். தேர்தலில் ஆளுங்கட்சிக்கு வாக்களிக்காமல் எதிர்க்கட்சிக்கு வாக்களித்து விட்டு அபிவிருந்தி வேலைத்திட்டங்களை இழக்க வேண்டாம் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ இந்தச் சந்திப்பின்போது தெரிவித்தார்.

இந்தச் சந்திப்பில் புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான விக்டர் எண்டனி, அருந்திக பெர்னாண்டோ,  புத்தளம் நகரபிதா கே.ஏ.பாயிஸ் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .