2025 மே 15, வியாழக்கிழமை

தந்திரிமலை - உபதிஸ்ஸ கிராமத்தை புனரமைக்க திட்டம்

Super User   / 2013 ஓகஸ்ட் 13 , மு.ப. 06:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.சீ.சபூர்தீன்

புராதன கிராமமான அநுராதபுரம், தந்திரிமலை - உபதிஸ்ஸ கிராமத்தில் சேதமுற்று காணப்படும் ஆறு குளங்களை இரண்டரை கோடி ரூபா செலவில் புனரமைக்கப்படவுள்ளதாக வட மத்திய மாகாண முதலமைச்சர் ரஞ்சித் சமரகோன் தெரிவித்தார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் ஆலோசனைப்படி உபதிஸ்ஸ கிராமத்திற்கு சகல வசதிகளும் மேற்கொள்ளப்படவுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார்.

இக்கிராமத்தின் அடிப்படை வசதிகளை செய்து கொடுப்பதற்காக பொருளாதார அபிவிருத்தி அமைச்சு மற்றும் அரச நிறுவனங்களின் உதவியுடன் பல்வேறுபட்ட அபிவிருத்திப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன எனவும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை, ஆறு கோடி 30 இலட்சம் ரூபா செலவில் 13 கிலோ மீற்றர் வீதி காபட் இட்டு புனரமைக்கபடவுள்ளதுடன் இந்த பகுதியில் புதிதாக 500 குடும்பங்கள் குடியமர்த்தப்படவுள்ளதோடு இதற்கான காணிகளும் ஒதுக்கப்பட்டுள்ளது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .