2025 மே 15, வியாழக்கிழமை

வீரசேன தசநாயக்கவின் இரத்தமாதிரியை பகுப்பாய்வுக்கு அனுப்புமாறு உத்தரவு

Suganthini Ratnam   / 2013 ஓகஸ்ட் 13 , மு.ப. 09:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.முஸப்பிர்

மறைந்த அமைச்சர் டி.எம்.தசநாயக்கவின் சகோதரரின் இரத்தமாதிரியை அரச இரசாயன பகுப்பாய்வுக்கு அனுப்புமாறு சிலாபம் சட்ட வைத்திய அதிகாரி பணித்துள்ளார்.

மறைந்த அமைச்சர் டி.எம்.தசநாயக்கவின் சகோதரர் வீரசேன (வயது 51) ஆண்டிகம பிரதேசத்திலுள்ள அவரது வீட்டுத் தோட்டத்திலிருந்து சடலமாக நேற்று திங்கட்கிழமை அதிகாலை மீட்கப்பட்டார்.

இவரது மரணம் மர்மமான முறையில் இடம்பெற்றதால், பிரேத பரிசோதனையை சிலாபம் வைத்தியசாலையில் நடத்துவதற்கு பள்ளம பொலிஸார் நடவடிக்கை எடுத்தனர்.  இந்த நிலையில், சிலாபம் சட்ட வைத்திய அதிகாரி முன்னிலையில்  பிரேத பரிசோதனை இடம்பெற்றது.

மரணம் சம்பவித்துள்ள காரணம் தொடர்பில் தெளிவான முடிவுக்கு வரமுடியாதுள்ளதால், மரணமடைந்தவரின் இரத்த மாதிரியை அரச இரசாயன பகுப்பாய்வுக்கு அனுப்பி அறிக்கை பெற்றுச் சமர்ப்பிக்குமாறு பள்ளம பொலிஸாருக்கு சட்ட வைத்திய அதிகாரி பணித்துள்ளார்.

இவரது சடலத்திற்கு அருகில் கையடக்கத் தொலைபேசி ஒன்றும் ஒரு சோடி பாதணியும் கண்டெடுக்கப்பட்டன. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .