2025 மே 15, வியாழக்கிழமை

நாமல் ராஜபக்ஷ புத்தளத்திற்கு விஜயம்

Super User   / 2013 ஓகஸ்ட் 13 , மு.ப. 11:49 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.என்.எம். ஹிஜாஸ், எம். எஸ். முஸப்பிர்


ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் புத்தளம் தொகுதி பிரதான காரியாலயம் இன்று செவ்வாய்க்கிழமை நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவினால் திறந்துவைக்கப்பட்டது.

இந்த காரியாலயம் புத்தளம் பஸ் நிலையத்தில் அமையப்பெற்றுள்ளது. இதேவேளை வட மேல் மாகாண சபை தேர்தலில் புத்தளம் மாவட்டத்தில் போட்டியிடும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் வேட்பாளர்கள் சிலரினது அலுவலகங்களையும் நாடாளுமன்ற உறுப்பினர் திறந்துவைத்தார்.

இந்த நிகழ்வுகளில் புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அருந்திக பெர்ணான்டோ மற்றும் புத்தளம் நகர சபை தலைவர் கே.ஏ. பாயிஸ் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இதேவேளை, ஹம்பாந்தோட்டை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ பாலாவி, நாகவ்லிலு எருக்கலம்பிட்டி பிரதேசத்திற்கும் விஜயம் செய்தார்.  வட மாகாண சபைத் தேர்தலில் மன்னார் மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஆதரவு வழங்கும் மக்கள் சந்திப்பு ஒன்றிலும் அவர் கலந்துகொண்டார்.

மன்னார் மாவட்ட ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வேட்பாளர்களின் கட்சி அலுவலகம் ஒன்றினையும் அவர் இந்த நிகழ்வின்போது திறந்து வைத்தார். பின்னர் நாகவில்லு எருக்கம்பிட்டி முஸ்லிம் மத்திய கல்லுரிக்கு விஜயம் செய்த அவர் அங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வைபவத்திலும் கலந்துகொண்டார்.

இந்த வைபவங்களில் புத்தளம் நகர சபைத் தலைவர் கே.ஏ.பாயிஸ்,  புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அருந்திக பெர்னாண்டோ வடமேல் மாகாண சபைத் தேர்தலில் புத்தளம் மாவட்டத்தில் போட்டியிடும் ஆப்தீன் எஹியா, சட்டத்தரணி ஏ.எம்.கமறுதீன், வடமேல் மாகாண முன்னாள் அமைச்சர் சனத் நிசாந்த உட்பட பலரும் கலந்துகொண்டனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .