2025 மே 15, வியாழக்கிழமை

வாகன விபத்தில் யுவதி பலி

Menaka Mookandi   / 2013 ஓகஸ்ட் 14 , பி.ப. 12:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.முஸப்பிர்

நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பஸ் ஒன்றுடன் முச்சக்கர வண்டியொன்று மோதி இடம்பெற்ற விபத்தில் படுகாயங்களுக்குள்ளாகி சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மேலதிகச் சிகிச்சைக்காக எடுத்துச் செல்லும் வழியில் உயிரிழந்துள்ளதாக மாதம்பை பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று மாலை கொழும்பு சிலாபம் வீதியில் கலஹிட்டியாவ எனும் பிரதேசத்தில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது. இவ்விபத்தில் உடுபத்தாவ பிபிலாதெனிய எனும் பிரதேசத்தில் வசிக்கும் ரேணுகா (வயது 35) எனும் யுவதியே இவ்வாறு உயிரிழந்தவராவார்.

இவ்விபத்தில் காயமடைந்த 60 வயதுடைய மற்றொரு பெண் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்ற அதேவேளை விபத்திற்குள்ளாக முச்சக்கர வண்டியின் சாரதியான 19 வயதுடைய இளைஞர் சிலாபம் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சிலாபமிருந்து நீர்கொழும்பு நோக்கிப் பயணித்த பஸ் வண்டி ஒன்று  கலஹிட்டியா எனும் பகுதியில் பயணிகளை ஏற்றுவதற்காக நிறுத்தப்பட்ட போது  இந்த பஸ்ஸை முந்திச் செல்ல முற்பட்டதாகச் சொல்லப்படும் குறித்த முச்சக்கர வண்டியின் சாரதி,  முன்னால் மற்றொரு வாகனம் வருவதை அவதானித்து கலவரமடைந்து நிறுத்தப்பட்டிருந்த பஸ்ஸின் பின்னால் மோதியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பஸ்ஸின் சாரதி மாதம்பை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை மாதம்பை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .