2025 மே 15, வியாழக்கிழமை

பள்ளிக்கு முன்னாலுள்ள விளம்பர பலகையை சேதப்படுத்த முயன்றவர் கைது

Super User   / 2013 ஓகஸ்ட் 14 , பி.ப. 01:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

-இ.அம்மார்

மாவத்தகமை பள்ளிவாசலுக்கு முன்பாகவிருந்த விளம்பர பலகையை சேதப்படுத்த முயன்ற ஒருவரை பொதுமக்கள் மடக்கிப்பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

மாவத்தகமை பொலிஸ் பிரிவில் கண்டி வீதியில் அமைந்துள்ள பறகஹதெனிய ஜும் ஆப் பள்ளிவாசலுக்கு முன்னால் உள்ள விளம்பர பலகையையே குறித்த நபர் சேதப்படுத்த முயன்றுள்ளார்.

'அமைதியாகச் செல்லவும்' என்ற வாசகத்தைக் கொண்ட விளம்பரப் பலகையையே இன்று அதிகாலை 4.00 மணியளவில் சீமெந்து பூசி அதன் வாசகத்தை மறைக்க முயற்சித்துள்ளார். குறித்த சந்தேகநபர் பஹகஹதெனிய பிரதேசத்தைச் சேர்ந்த ஆசிரியர் என தெரிவிக்கப்படுகிறது.

மோட்டார் சைக்கிளில் வந்த குறித்த நபர் விளம்பரப் பதாதைக்கு சீமெந்து பூச முற்பட்ட போது அவரை நோக்கி கல்லெறியப்பட்டுள்ளது.  இதனையடுத்து மோட்டார் சைக்கிளை அவ்விடத்திலேயே அவர் விட்டுவிட்டு ஓடிவிட்டார்.

பின்னர் அந்த நபர் பள்ளிவாசலில் தொழுதுவிட்டு மோட்டார் சைக்கிளை எடுத்துக்கொண்டு செல்ல முயன்றபோதே அவரை இளைஞர்கள் பிடித்து பொலிஸில் ஒப்படைத்துள்ளனர்.

பொது பல சேனாவின் பொதுக்கூட்டம் குருநாகல் நகரில் நேற்று நடைபெற்றது. அக்கூட்டத்தில் பொது பல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தஞான தேரர் அங்கு உரையாற்றுகையில், "கண்டி குருநாகல் வீதியில் பறகஹதெனிய பள்ளிவாசலுக்கு முன்னால் அமைதியாகச் செல்லுங்கள் என்று  விளம்பரப் பதாதையை அகற்றுமாறு வேண்டுகோள் விடுத்ததுடன் அதனை அகற்றா விட்டால் தாங்கள் அகற்ற வேண்டி வரும்" எனவும் அங்கு அவர் எச்சரிக்கை விடுத்திருந்தார்.

அதனைத் தொடர்ந்து  மாவத்தகம பிரதேச சபை உறுப்பினர் யாசிம் சேர் இல்லத்தில் இந்தச் சம்வம் தொடர்பாக விசேட கூட்டம் 12-08-2013 அன்று இரவு எட்டு மணி அளவில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் விளம்பரப் பலகையை அகற்றுவதில்லை அவ்வாறு அகற்றுவதற்கு நாங்கள் இடமளிக்க மாட்டோம் என்று அங்கு வருகை தந்திருந்த மக்கள் மத்தியில் குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நிரஞ்சன் விக்கிரமசிங்க மற்றும் குருநாகல் மாவட்ட ஸ்ரீ. சு. கட்சி அமைப்பாளர் அப்துல் சத்தார் ஆகியோர் இணைந்து மக்களிடத்தில் உறுதி மொழி வழங்கினர்.

அத்துடன் விளம்பரப் பலகையை பொலிஸ் பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .