2025 மே 15, வியாழக்கிழமை

கோபுரத்தின் மீதேறி ஒருவர் ஆர்ப்பாட்டம்

Suganthini Ratnam   / 2013 ஓகஸ்ட் 15 , மு.ப. 11:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.முஸப்பிர்

கைத்தொழிலில் ஈடுபட்டு வருகின்ற ஒருவர் தொலைத்தொடர்பு கோபுரத்தின் மீதேறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்.

இலங்கை மின்சார சபையின் சிலாபம் மின்சாரப் பொறியியலாளர் அலுவலகத்திற்கு அருகில் உள்ள தொலைத்தொடர்பு கோபுரத்தின் மீதேறி இவர்
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்.

கைத்தொழில் பொருட்கள் கண்காட்சியின்போது தேசிய கலைகள் சபை தனக்கு அநீதி இழைத்துள்ளதாகக் கூறியே இவர் நேற்று புதன்கிழமை இவ்வாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்.

இந்தக் கோபுரத்தின் உச்சிக்கு ஏறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இவர், தனக்கு ஏற்பட்டுள்ள அநீதி தொடர்பாகவும் இந்த அநீதிக்கு தனக்கு நியாயம் வழங்க வேண்டும் எனவும் கூறியதுடன், இதற்கு  தனக்கு நியாயம் கிடைக்கும்வரை தான் கோபுரத்திலிருந்து இறங்கப் போவதில்லை எனவும்  எழுதிய கடிதம் ஒன்றையும் கீழே போட்டுள்ளார்.

இந்நிலையில் ஆர்ப்பாட்ட இடத்திற்கு வருகை தந்த பிரதி வெளிவிவகார அமைச்சர் நியோமல் பெரேரா,  அவரின் விடயம் தொடர்பில் கவனம் செலுத்துவதாகவும் நியாயம் கிடைக்க தான் நடவடிக்கை எடுப்பதாகவும்  கூறியதைத் தொடர்ந்து குறித்த நபர் தனது ஆர்ப்பாட்டத்தைக் கைவிட்டு கோபுரத்திலிருந்து கீழே இறங்கினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .