2025 மே 15, வியாழக்கிழமை

அச்சுறுத்தி கப்பம் பெற முயன்றவர் கைது

Super User   / 2013 ஓகஸ்ட் 17 , மு.ப. 04:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.முஸப்பிர்

தொலைபேசியில் ஒருவரை அச்சுறுத்தி கப்பம் பெற முயன்றதாகச் கூறப்படும் ஒருவரைக் கைது செய்துள்ளதாக தங்கொட்டுவை பொலிஸார் தெரிவித்தனர்.

தங்கொட்டுவை நகரில் வைத்து நேற்று வெள்ளிக்கிழமை இரவு இவரைக் கைது செய்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர் தன்னை பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவின் அதிகாரி எனக் கூறிக் கொண்டு வழக்கொன்றில் சிக்க வைப்பதாகக் தொலைபேசியில்  ஒருவரை அச்சுறுத்தியே கப்பம் பெற முயன்றுள்ளதாக விசாரணைகளிலிருந்து தெரிய வந்துள்ளது என பொலிஸார் தெரிவித்தனர். 

இவ்வாறு அச்சுறுத்தி பத்தாயிரம் ரூபாவினை கப்பமாகப் பெற முயன்ற போதே சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக தங்கொட்டுவை பொலிஸார்  தெரிவித்தனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை தங்கொட்டுவை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .