2025 டிசெம்பர் 17, புதன்கிழமை

சமூக அபிவிருத்தி நீர் ஒத்துழைப்பு பற்றிய சர்வதேச மாநாடு

Suganthini Ratnam   / 2013 ஓகஸ்ட் 18 , மு.ப. 05:41 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.சி.அன்சார்


சமூக அபிவிருத்தி நீர் ஒத்துழைப்பு பற்றிய சர்வதேச மாநாடு அநுராதபுரத்தில் உள்ள மாகாண சபை கேட்போர் கூடத்தில் நேற்றுமுன்தினம் வெள்ளிக்கிழமை ஆரம்பாகியுள்ளது. 

இந்த மாநாடு எதிர்வரும் 18ஆம் திகதிவரை நடைபெறவுள்ளது.

நீர்வழங்கல் வடிகாலமைப்பு அமைச்சின் வழிகாட்டலில் கீழ், தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை இரண்டாவது தடவையாக இலங்கையில் இந்த மாநாட்டை ஏற்பாடு செய்துள்ளது.

நீர்வழங்கல் வடிகாலமைப்பு அமைச்சர் தினேஷ் குணவர்த்தன தலைமையில் நடைபெற்றுவரும் இந்த  மாநாட்டில் பிரதம அதிதியாக பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ கலந்து கொண்டார்.

மேலும் அமைச்சர்களான பிலீக்ஸ் பெரேரா, திஸ்ஸ கரலியத்த, வடமத்திய முதலமைச்சர் ரஞ்சித் சமரக்கோன், உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X