2025 மே 15, வியாழக்கிழமை

வெட்டுக் காயங்களுடன் ஆளுங்கட்சி உறுப்பினர் வைத்தியசாலையில்

Kogilavani   / 2013 ஓகஸ்ட் 19 , மு.ப. 10:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.முஸப்பிர்

கடுமையான வெட்டுக்காயங்களுக்கு உள்ளான நிலையில் மாராவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த வென்னப்புவ பிரதேச சபையின் ஆளுங்கட்சி உறுப்பினர் ஒருவர் மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு வென்னப்புவ காலவத்தை பிரதேசத்தில் அமைந்துள்ள விளையாட்டு மைதானத்திற்கருகில் வைத்தே இவர் மீது கத்திக் குத்துத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

உடனடியாக மாராவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர் மேலதிக சிகிச்சைக்காக கொழும்புக்கு
மாற்றப்பட்டுள்ளார். 

இத்தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய இருவரை  கைதுசெய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .