2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

திடீர் மரண விசாரணை அதிகாரி மீது தாக்குதல்

Super User   / 2013 ஓகஸ்ட் 19 , மு.ப. 11:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.முஸப்பிர்

புத்தளம் பகுதிக்கான திடீர் மரண விசாரணை அதிகாரி மீது நேற்று ஞாயிற்றுக்கிழமை கத்திக் குத்து தாக்குதலில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதனால் காயங்களுக்குள்ளான இவர், புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

புத்தளம் மன்னார் வீதியின் இரண்டாம் கட்டை பகுதியில் அமைந்துள்ள தனியார் உப்பு உற்பத்தியாளர் நலன்புரிச் சங்க அலுவலகத்தில் வைத்தே இவர் மீது இத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தனிப்பட்ட பிரச்சினை ஒன்றின் நிமித்தமே இத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகத் தெரிவித்த பொலிஸார்  சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரைக் கைது செய்ய நடவடிக்கை மேற்கொண்டிருப்பதாகத் தெரிவித்தனர். 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X