2025 மே 15, வியாழக்கிழமை

பாரிய கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை

Menaka Mookandi   / 2013 ஓகஸ்ட் 19 , மு.ப. 11:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.முஸப்பிர்

யூரியா உரத்தினை உபயோகித்து மேற்கொள்ளப்பட்ட பாரியளவிலான சட்டவிரோத கசிப்பு உற்பத்தி நிலையம் ஒன்றினைச் சுற்றிவளைத்துள்ள பள்ளம பொலிஸார், அங்கிருந்து கசிப்பு மற்றும் கசிப்பு உற்பத்திக்கு பயன்படும் உபகரணங்கள் பலவற்றுடன் மூன்று சந்தேக நபர்களையும் கைது செய்துள்ளனர். 

பள்ளம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாகவில எனும் பகுதியிலேயே நேற்று இரவு முதல் இன்று அதிகாலை வரை இச்சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த இடத்திலிருந்து  57 பெரல்கள், 13 செப்புக் கம்பிச் சுருள்கள், பெருமளவிலான கோடா, 9 கிலோ அமோனியா, 10 கிலோ யூரியா உரம் உட்பட உற்பத்தி செய்யப்பட்டிருந்த 40 போத்தல் கசிப்பையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

இங்கிருந்து கைது செய்யப்பட்டவர்கள் அங்கு கூலிக்கு வேலை செய்யும் நாகவில பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் எனவும், இந்த சட்டவிரோத கசிப்பு உற்பத்தி நிலையத்தின் உரிமையாளரான பிரதான நபர் பிரதேசத்தை விட்டுத் தலமறைவாகியுள்ளதாகவும் பொலிசார் தெரிவித்தனர்.

இந்த இடத்தில் தினம் ஒன்றில் இரண்டு தடவைகள் சுமர் 2000 போத்தல் கசிப்பு உற்பத்தி செய்யப்பட்டு அவை கொழும்பு மற்றும் ஜாஎல போன்ற பகுதிகளில் விற்பனை செய்வதற்காக அனுப்பப்படுவதாகவும் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் பொலிசாரிடம் தெரிவித்துள்ளனர்.

இங்கு கசிப்பு உற்பத்திக்கு தேவையான தண்ணீரைப் பெற்றுக் கொள்ள நிரந்தமான நீர் தாங்கி ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளதாகவும், ஒரு தடவையில் 28 பெரல்களுக்கு கசிப்பு உற்பத்தி மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். மேலதிக விசாரணைகளை பள்ளம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .