2025 மே 15, வியாழக்கிழமை

வடமத்திய மாகாணத்தை சுற்றுலாத்துறை வலயமாக மாற்ற நடவடிக்கை

Suganthini Ratnam   / 2013 ஓகஸ்ட் 21 , மு.ப. 06:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.சீ.சபூர்தீன்

அதிகளவிலான புராதன இடங்களைக் கொண்ட வடமத்திய மாகாணத்தை புதிய சுற்றுலாத்துறை வலயமாக மாற்றுவதற்குத் தேவையான சகல நடவடிக்கையும் முன்னெடுக்கப்படவுள்ளதாக வடமத்திய மாகாண கூட்டுறவு, கிராமிய அபிவிருத்தி மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் கே.எச்.நந்தசேன தெரிவித்துள்ளார்.

அநுராதபுரம் மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களில் தற்பொழுது  அதிகளவிலான வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகை தந்தவண்ணமுள்ளனர். இதனைக் கருத்திற் கொண்டு அவர்களுக்குத் தேவையான சகல வசதிகளும் செய்து கொடுக்கப்படவுள்ளன.

மேலும், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பினை கருத்திற் கொண்டு சுற்றுலா விருத்தி அலுவலகம் ஒன்றும் அமைக்கப்படவுள்ளது எனவும் அவர் கூறினார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .