2025 மே 15, வியாழக்கிழமை

வீட்டு வசதியற்றவர்களுக்கு குறைந்த வட்டியில் கடன்

Suganthini Ratnam   / 2013 ஓகஸ்ட் 22 , மு.ப. 06:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.சீ.சபூர்தீன்

அநுராதபுரம் மாவட்டத்தில் வீடுகள் இன்றியுள்ள 13,000 குடும்பங்கள் புதிதாக வீடுகளை அமைப்பதற்காக குறைந்த வட்டியில் கடன் வழங்கும் வேலைத்திட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளதாக வீடு அபிவிருத்தி அதிகாரி சபையின் அநுராதபுரம் மாவட்ட முகாமையாளர் ஆர்.எம்.பியதிஸ்ஸ தெரிவித்தார்.

ஜனாதிபதியின் ஆலோசனைப்படி அமைச்சர் விமல் வீரவன்ஸவின் வழிகாட்டலின் கீழ் இத்திட்டம் முன்னெடுக்கட்டுள்ளது.

இத்திட்டத்தின் கீழ் காணி மற்றும் வீடு இன்றியுள்ள குடும்பங்களுக்கு காணியுடன் வீடுகளும் காணியுள்ள அதேவேளை வீடுகள் இன்றியுள்ள குடும்பங்களுக்கு புதிய வீடுகளும் அமைப்பதற்காக குறைந்த வட்டியில் கடனுதவி வழங்கப்படவுள்ளதாகவும் அவர் கூறினார்.

இது இவ்வாறிருக்க பலாகல, கெக்கிராவ, உலுக்குளம், கல்குளம், கட்டுக்கெலியாவ, கலென்பிந்துனுவெவ, ஹொரவப்பொத்தானை மற்றும் திரப்பனை  பிரதேச செயலாளர் பிரிவுகளில் புதிய வீடுகளை அமைக்கும் திட்டம் ஏற்கெனவே முன்னெடுக்கப்பட்டுள்ளதெனவும் அவர்  தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .