2025 மே 15, வியாழக்கிழமை

சங்கிலியை அறுத்தவர் மடக்கிப்பிடிப்பு

Suganthini Ratnam   / 2013 ஓகஸ்ட் 23 , மு.ப. 03:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.முஸப்பிர்

ரயிலில் பயணித்துக்கொண்டிருந்த பெண் கிராம உத்தியோகத்தர் ஒருவரின் தங்கச்சங்கிலியை அறுத்துக்கொண்டு தப்பியோடுவதற்கு முயன்றதாகக் கூறப்படும் ஒருவரை ஏனைய பயணிகள் மடக்கிப்பிடித்து முந்தல் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

முந்தல் ரயில் நிலையத்திற்கு அருகிலேயே நேற்று வியாழக்கிழமை இரவு 8.45 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. சுமார் 90,000 ரூபா பெறுமதியான தங்கச்சங்கிலியே அறுத்துக்கொள்ளப்பட்டுள்ளதாக  முந்தல் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த பெண் கிராம உத்தியோகத்தர் தனது தேவையின்  நிமித்தம் கொழும்பு சென்றுவிட்டு  கொழும்பிலிருந்து புறப்பட்ட ரயிலில் திரும்பிக்கொண்டிருந்தார். இவர் பயணித்துக்கொண்டிருந்த ரயில் முந்தல் ரயில்  நிலையத்தில் நிறுத்தப்பட்டு மீண்டும் பயணத்தை ஆரம்பித்த சிறிது நேரத்தில் அங்கிருந்த ஒருவர் திடீரென இவர் அணிந்திருந்த தங்கச்சங்கிலியை அறுத்துக்கொண்டு தப்பியோடுவதற்கு முயன்றுள்ளார்.

இந்த நிலையில் இந்தக் கிராம உத்தியோகத்தர் சத்தமிடுவதை அவதானித்த  அங்கிருந்த ஏனைய பயணிகள், தப்பியோடுவதற்கு முயன்ற சந்தேக நபரை மடக்கிப்பிடித்து பொலிஸில் ஒப்படைத்துள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.

இது தொடர்பான விசாரணையை முந்தல் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .