2025 மே 15, வியாழக்கிழமை

குளிசை தொண்டையில் சிக்கி குழந்தை பலி

Kogilavani   / 2013 ஓகஸ்ட் 23 , மு.ப. 11:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.முஸப்பிர்

குளிசை தொண்டையில் சிக்கிய நிலையில் சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட  ஒன்றரை வயது குழந்தை பரிதாபரகமாக இன்று உயிரிழந்துள்ளது. 

சிலாபம், கரவிட்டாகார எனும் பிரதேசத்தைச் சேர்ந்த ரங்கோத் சதேவி சங்கல்ப எனும் ஒன்றரை வயது ஆண் குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது.

குழந்தைக்கு ஏற்பட்ட சுகயீனம் காரணமாக அரை பங்கு குளிசையை அருந்துவதற்கு கொடுத்துள்ளனர். இதன்போது, குழந்தையின் தொண்டையினுள் குளிசை சிக்கிக் கொண்டுள்ளது.

பின்னர் உடனடியாக குழந்தை சிலாபம் வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டு ஆரம்ப சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டபோது குழந்தை உயிரிழந்துள்ளது.

பிரேத பரிசோதனைக்காக குழந்தையின் உடல் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம்  தொடர்பில் சிலாபம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

You May Also Like

  Comments - 0

  • ibnuaboo Friday, 23 August 2013 04:12 PM

    பிள்ளையை பெற்றுவிட்டால் போதுமா? பேணி வளர்க்க வேண்டும் தெரியுமா? ஒன்றரை வயதுப் பிள்ளைக்கு குளிசையை மாவாக்கி தண்ணீரில் அல்லது தேனில் கலைத்து கொடுக்க தெரியாமல் பாவம் அந்தப் பாலகனைக் கொன்றுவிட்டார்களே...!

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .