2025 மே 15, வியாழக்கிழமை

சந்தேகநபர் நீதிமன்றத்திலிருந்து தப்பியோட்டம்

Kanagaraj   / 2013 ஓகஸ்ட் 23 , பி.ப. 05:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம். எஸ். முஸப்பிர்

பல்வேறு கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடையதாகச் சொல்லப்படும் சந்தேக நபர் ஒருவர் சிலாபம் நீதிமன்றத்தில் வைத்து சிறைச்சாலை அதிகாரிகளிடமிருந்து தப்பிச் சென்றுள்ளார்.

நேற்று வியாழக்கிழமை மாலை  இடம்பெற்றுள்ள இச்சம்பவத்தில் குளியாபிட்டி பிரதேசத்தைச் சேர்ந்த 34 வயதுடைய ஒருவரே இவ்வாறு தப்பிச் சென்றவராவார்.

மாதம்பை பிரதேசத்தில் இடம்பெற்றதாகச் சொல்லப்படும் கொள்ளைச் சம்பவம் ஒன்று தொடர்பில் சிலாபம் நீதிமன்றத்தில் சந்தேக நபருக்கு எதிரக வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டிருந்துள்ளது.

இந்த வழக்கு விசாரணைக்காக நீர்கொழும்பு சிறைச்சாலையிலிருந்து சந்தேக நபர் சிலாபம் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.  நீதிமன்றத்தில் இடம்பெற்ற வழக்கு விசாரணையின் போது அவருக்கான குற்றத்தை சந்தேக நபர் ஒப்புக் கொண்டதன் பின்னர் அவரின் கைவிரல் அடையாளங்களைப் பெறுமாறு சிறைச்சாலை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இதன் பின்னர் சிறைச்சாலை அதிகாரிகளின் பாதுகாப்புடன் நீதிமன்ற அலுவலகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட சந்தேக நபர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். இச்சம்பவம் தொடர்பில் சிறைச்சாலை அதிகாரிகள் சிலாபம் பொலிசாரிடம் முறைப்பாடு செய்துள்ளனர்.

சிலாபம் பொலிசார் இச்சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .