2025 ஜூலை 12, சனிக்கிழமை

லொறியிலிருந்து தவறி விழுந்தவர் மரணம்

Suganthini Ratnam   / 2013 ஓகஸ்ட் 26 , மு.ப. 10:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.முஸப்பிர்

லொறியிலிருந்து தவறி வீழ்ந்த பெண்ணொருவர் நேற்று ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்துள்ளார்.

கடந்த 20ஆம் திகதி மாரவிலவிலிருந்து வென்னப்புவ செல்லும் கடலோர வீதியில் சென்றுகொண்டிருந்த லொறியிலிருந்தே இப்பெண் தவறி விழுந்துள்ளார்.

குறித்த லொறியின் பின்புறத்திலிருந்து இப்பெண் தவறி விழுந்த நிலையில் படுகாயமடைந்துள்ளார்.

இந்த நிலையில்,  மாரவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இப்பெண் அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார். 

அங்கு சிகிச்சை பெற்றுவந்த நிலையிலேயே இப்பெண் உயிரிழந்துள்ளதாக பொலிஸார்  தெரிவித்தனர்.

ஆண்டிகம, புத்திபிரிய பகுதியைச் சேர்ந்த நிர்மலா சஞ்ஜீவனி (வயது 34) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவத்துடன் தொடர்புடையதாகக் கருதப்படும் குறித்த லொறியின் சாரதியை மாரவில பொலிஸார் கைதுசெய்துள்ளதுடன், இது தொடர்பான விசாரணையையும் மேற்கொண்டு வருகின்றனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .