2025 மே 15, வியாழக்கிழமை

அரசின் ஊதுகுழலாக தவிசாளர் செயற்படுகின்றார்: அமைச்சர் ஹக்கீம்

Super User   / 2013 ஓகஸ்ட் 27 , மு.ப. 12:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தவிசாளர் அரசாங்கத்தின் ஊதுகுழலாக செயற்படுகின்றார் என அக்கட்சியின் தலைவரும் நீதி அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

இதற்கு நன்றிக்கடனாகவே அவருக்கு அமைச்சரவை அந்தஸதுள்ள அமைச்சு பதவி வழங்கப்பட்டுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார்.

அரசாங்கத்தின் ஊதுகுழல் என்பது கடந்த கிழக்கு மாகாண சபை தேர்தலின்போது நன்கு அறிய முடிந்தது என அவர் தெரிவித்தார்.

"அத்துடன் கட்சியின் அங்கீகாரமில்லாமல் அமைச்சர் பதவியொன்றை பெற்றுள்ளார். அவரின் கருத்துகள் இன்று கட்சிக்கு ஒத்துபோகாதவையாக உள்ளன. அவரால்  கூட்டப்படும் எந்தவொரு கூட்டமும் முஸ்லிம் காங்கிரஸினால் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது" எனவும் அமைச்சர் ஹக்கீம் குறிப்பிட்டார்.

புத்தளம் நடைபெற்ற பிரசார கூட்டத்தில் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,

"இந்த அமைச்சு பதவி மூலம் அரசாங்கம் அவருக்கு பதவியுயர்வு வழங்கியுள்ளது. இந்த பதவியுயர்வு குறித்து கட்சிக்கும் தெரியாது தலைவருக்கும் தெரியாது. திடீரென்று  வழங்கப்பட்ட பதவியுயர்வானது எனக்கு சமாந்தரமாக அமைச்சுப் பதவியாகும்.

இந்த விசித்திரமும் நடக்குது. அவர் தான் எமது கட்சின் புத்தளம் மாவட்ட தேர்தல் பொறுப்பாளர் ஆனால் அவர் இங்கு இல்லை. அவர் இங்கு வரமாட்டார். அப்படி அவர் வரவேண்டியிருந்தால் அமைச்சர் பதவிய இராஜினாமாச் செய்ய வேண்டும்.அப்படி பொறுப்பான பதவியை தான் ஜனாதிபதி அவருக்கு வழங்கியுள்ளார்.

ஊக்குவிப்புத் திறன் அமைச்சு என்றால் என்னவென்று அகராதிய எடுத்துத்தான் பார்க்க வேண்டும். இந்த அமைச்சருக்கு இருக்கிற நோய் என்னவென்றால் அமைச்சு பதவியை இராஜினாமா செய்யாமல் அரசாங்கத்தை விமர்சிக்க முடியாது.
அந்தளவிற்கு பொறுப்பான பதவியை அரசாங்கம் அவருக்கு கொடுத்துள்ளது.

தற்போது  அவர் முஸ்லிம் காங்கிரஸ் எடுத்த முடிவு பிழை என்று மேடை போட்டு பேசுவதுடன் பத்திரிகை அறிக்கையும் விடுகின்றார். விவஸ்தையில்லாம அறிக்கை விடுவதில் எந்தவித அர்த்தமுமில்லை. இந்த கட்சியின் போராளிகளை நேரடியாகச் சந்திப்பதற்கு அவருக்குத் திராணியிருக்க வேண்டும். அவருக்கு முடியுமாக இருந்தால் அந்த விடயத்தை நேரடியாக வந்து மக்கள் முன் பேச வேண்டும்" என்றார்.

இந்த கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரிஸ், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ. தவம் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

You May Also Like

  Comments - 0

  • VALLARASU. Tuesday, 27 August 2013 04:26 AM

    ஐயா, ஒரு தலைவர் என்பவருக்கு ஆளுமை தேவை. அது உங்களிடம் இல்லை, எங்கள் முன்னாள் தலைவரின் ஆளுமையை கண்டு கட்சி உறுப்பினர்கள் பயந்து நடுங்குவார்கள். அவர்தான் தலைவர்,நீங்கள்?

    Reply : 0       0

    Hassan Basit Tuesday, 27 August 2013 04:47 AM

    அதெல்லாம் சரி, கடந்த கிழக்கு மாகாண சபை தேர்தலின்போது நீங்கள் ஆடிய நாடகத்துக்கு, இந்த கட்சியின் போராளிகளை நேரடியாகச் சந்திப்பதற்கு உங்களுக்குத் திராணியிருக்கிறதா?

    Reply : 0       0

    நண்பன் Tuesday, 27 August 2013 08:35 AM

    ஐயா , கட்சிக்கு வேலை செய்வதற்கு அமைச்சுப் பதவி தடை என்றால் அரசுக்கு வேலை செய்வதற்கு கட்சியின் உறுப்புரிமை ஏன் தடையாக இருக்கவில்லை? முதலில் உறுப்புரிமையிலிருந்து விலகிவிட்டுத்தானே அமைச்சைப் பெற்றிருக்கவேண்டும். அவ்வாறு செய்வதுதான் சிறந்த செயற்பாடாகும்.

    Reply : 0       0

    நண்பன் Tuesday, 27 August 2013 08:43 AM

    அரசுடன் சேரமாட்டேன் எனறு நாடகம் ஆடினாரா? அல்லது தமிழர்களுடன் சேர்ந்து ஆட்சியமைப்பேன் எனறு சொல்லிட்டு அதைவிட்டு விழகி நாடகம் ஆடினாரா? இல்லையே! தனியாக தேர்தலை சந்தித்துவிட்டு அரசுடன்தான் இருப்போம் அதுவும் சுயமரியாதையுடன் என்றுதானே சொன்னார்? அவ்வாறுதானே செய்தார்?

    Reply : 0       0

    நண்பன் Tuesday, 27 August 2013 08:49 AM

    ஐயா ! மற்றவனின் தொடை நடுங்கச் செய்வது மனிதனின் ஆளுமையல்ல. அவ்வாறு செய்தாலும்கூட சர்வதிகாரி என்று கூட சொல்வார்கள். பின்ன நாட்டு வழக்கில பயன்படுத்தப்படுகின்ற வசனம் இங்கு பொருத்தம்.

    Reply : 0       0

    ABU SAMA Tuesday, 27 August 2013 09:16 AM

    அடி புடி துவங்கிட்டு. சண்டை புடிச்சு மக்களைக் குழப்புங்க. அது உங்களுக்கு கை வந்த கலையாச்சே.

    Reply : 0       0

    aizaad Tuesday, 27 August 2013 09:32 AM

    தலைவரைப் பார்த்து பயந்து நடுங்குவார்கள் என்றால் அங்கு உட்கட்சி ஜனநாயகம் இல்லை என்று அர்த்தம். ஆனால் இப்போது அது இருக்கிறது.

    Reply : 0       0

    Mr.Cool Tuesday, 27 August 2013 11:33 AM

    இதற்குத்தான் மறைந்த தலைவர் கழுதையை சுமந்து கொண்டு சென்ற வாப்பாவையும் மகனையும் பற்றி கதை சொல்லி வேதனைப்பட்டார்.

    Reply : 0       0

    S G Tuesday, 27 August 2013 07:45 PM

    பாவம் மக்கள்!

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .