2025 மே 15, வியாழக்கிழமை

முழந்தாளிடவைத்த முன்னாள் உறுப்பினருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்

Kanagaraj   / 2013 ஓகஸ்ட் 27 , பி.ப. 09:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் முன்னிலையில் ஆசிரியையை முழந்தாளிடவைத்த வடமேல் மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் ஆனந்த சரத்குமாரவுக்கு எதிராக குற்றப்பத்திரிகை நேற்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

புத்தளம் மேல் நீதிமன்றத்திலேயே குற்றப்பத்திரிகை நேற்று செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டபோது தான் நிரபராதியென்று பிரதிவாதி நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

இதனையடுத்து நவம்பர் 25 ஆம் திகதி முதல் வழக்கை விசாரணை செய்வதற்கு தீர்மானித்த நீதவான், சாட்சிகளுக்கு நோட்டீஸ் அனுப்புமாறு உத்தரவிட்டார்.

இந்நிலையில் பிரதிவாதி சார்பில் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்த சட்டத்தரணி தனது தரப்பை சேர்ந்தவருக்கு கடும் பிணை நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளமையினால் அதனை தளர்த்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கோரிநின்றார். எனினும் அதற்கு முறைப்பாட்டாளர் சார்பில் ஆஜராகியிருந்த சட்டத்தரணி கடும் எதிர்ப்பை தெரிவித்தார்.

இந்த சம்பவத்தினை பாரதூரமாக கருதியே நீதவானின் விசாரணை தவிர்க்கப்பட்டு குற்றப்பத்திரிகையை சட்டமா அதிபரினால் நேரடியாகவே தாக்கல் செய்யப்பட்டுள்ளது.என்பதுடன் இந்த வழக்கு விசாரணை நவம்பர் 25 ஆம் திகதி முதல் தொடர்ச்சியாக மூன்று நாட்களுக்கு நடத்துவதற்கு நீதவான் நேற்று தீர்மானித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .