2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

தேர்தல் சுவரொட்டிகளை ஒட்டிக்கொண்டிருந்த ஐவர் கைது

Suganthini Ratnam   / 2013 ஓகஸ்ட் 29 , மு.ப. 08:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.என்.எம்.ஹிஜாஸ்

முந்தல், அக்கரவெளி பிரதேசத்தில் தேர்தல் சுவரொட்டிகளை ஒட்டிக்கொண்டிருந்ததாக கூறப்படும் 5 பேர் முந்தல் பொலிஸாரினால் நேற்று கைதுசெய்யப்பட்டுள்ளார்கள்.

கைதுசெய்யப்பட்டவர்களிடமிருந்து 950 சுவரொட்டிகள் மீட்கப்பட்டதாகவும் மீட்கப்பட்ட சுவரொட்டிகள் முஸ்லிம் காங்கிரஸில் போட்டியிடும் வேட்பாளருடையது எனவும் முந்தல் பொலிஸார் தெரிவித்தனர்.

கைதுசெய்யப்பட்டவர்கள் அனைவரும் பாலாவி பிரதேசத்தினை சேர்ந்தவர்களெனவும் கைதுசெய்யப்பட்டவர்களினை எதிர்வரும் 04ஆம் திகதி புத்தளம் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு கூறி  பொலிஸ் பிணையில் விடுவித்துள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X