2025 மே 15, வியாழக்கிழமை

கொள்கலனினுள் இந்தோனேஷிய மெத்தைகள்

Suganthini Ratnam   / 2013 ஓகஸ்ட் 29 , மு.ப. 10:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.முஸப்பிர்

கல்பிட்டி, கருக்குப்பனை பிரதேசத்திலுள்ள ஆழ்கடலில் மீட்கப்பட்ட கொள்கலனினுள்ளே இந்தோனேஷிய நிறுவனமொன்றுக்குச் சொந்தமானதென சந்தேகிக்கப்படும் இறப்பர் மெத்தைககள் காணப்பட்டதாக சிலாபம் பொலிஸார் தெரிவித்தனர்.

இக்கொள்கலன் ஆழ்கடலில் மிதந்துகொண்டிருந்தபோது மீட்கப்பட்டு கரைக்கு கொண்டுவரப்பட்டது. இக்கொள்கலன் கருக்குப்பனை கடற்கரையில்  பொலிஸார், கடற்படையினர் மற்றும் சிலாபம் பிரதேச செயலக அதிகாரிகள் முன்னிலையில் இன்று வியாழக்கிழமை காலை திறக்கப்பட்டது.

இந்நிலையில், இக்கொள்கலனினுள் ஒரு அடி அகலமும் 2 அடி நீளமும் கொண்ட இறப்பர் மெத்தைகள்  காணப்பட்டன.  இந்த இறப்பர் மெத்தைகளில் இந்தோனேஷியாவென குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் இந்த மெத்தைகள் இந்தோனேஷிய நிறுவனமொன்றுக்குரியதாக இருக்கலாமென்று சந்தேகிப்பதாகவும்  பொலிஸார் தெரிவித்தனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .