2025 மே 14, புதன்கிழமை

ஓடுகள் வழங்கிவைப்பு

Suganthini Ratnam   / 2013 ஓகஸ்ட் 30 , மு.ப. 04:12 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.என்.எம்.ஹிஜாஸ்


'தேசத்திற்கு மகுடம்' கண்காட்சியை முன்னிட்டு புத்தளம் மாவட்டத்தில் ஓலையால் கூரை மேயப்பட்டுள்ள வீடுகளுக்கு  நேற்று வியாழக்கிழமை ஓடுகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

புத்தளம் மாவட்டத்தில் முதற்கட்டமாக ஓலையால் கூரை மேயப்பட்டுள்ள 42,000 வீடுகளுக்காக இந்த  ஓடுகள் வழங்கப்பட்டுள்ளன.

கல்பிட்டி, ஆலங்குடா பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வில் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் எச்.எம்.சந்திரசேன, புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் விக்டர் அன்டனி பெரேரா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் இரண்டாம் கட்டமாக கூரை அமைக்கப்படாமல் காணப்படும் வீடுகளுக்கு  கூரை  அமைக்கப்பட்டு ஓடுகள் வழங்கப்படுவதுடன், மூன்றாம் கட்டமாக வீடுகள் அற்றவர்களுக்கு வீடுகள் அமைத்து கொடுக்கப்பட்டு பின் ஓடுகள் வழங்கப்படவுள்ளன.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .