2025 மே 14, புதன்கிழமை

போலி ஆவணங்களை தயாரித்து கடன் பெற்ற ஆசிரியை கைது

Kanagaraj   / 2013 செப்டெம்பர் 02 , பி.ப. 03:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

போலி ஆவணங்களை தயாரித்து வங்கியிலிருந்து ஒரு இலட்சம் ரூபாவை கடனாக பெற்ற ஆசிரியை ஒருவரை புத்தளம் பிரிவு விசேட குற்றப்புலனாய்வு பிரிவினர் இன்று திங்கட்கிழமை கைது செய்துள்ளனர்.

தான் கற்பித்த பாடசாலையின் அதிபர் மற்றும் புத்தளம் வலய கல்வி காரியாலயத்தின் நிதியுதவியாளர் ஆகியோரின் கையொப்பங்களை குறித்த ஆசிரியை போலியாக இட்டே வங்கியிலிருந்து கடனை பெற்றுள்ளார் என்று தெரிவிக்கப்படுகின்றது.

அதுமட்டுமன்றி இறப்பர் முத்திரையும் அவர் போலியாக தயாரித்துள்ளார்.

அந்த ஆசிரியையின் பிறப்புச்சான்றிதழ் மற்றும் அடையாள அட்டையையும் போலியானது என்றும் தெரிவிக்கப்படுகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .