2025 ஜூலை 09, புதன்கிழமை

வேட்பாளர் மீது தாக்குதல்

Super User   / 2013 செப்டெம்பர் 16 , மு.ப. 05:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ். எம். மும்தாஜ், எம்.என்.எம். ஹிஜாஸ்

வடமேல் மாகாண சபைத் தேர்தலில் புத்தளம் மாவட்டத்தில் தேசிய ஐக்கிய முன்னணியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கே.எம். பைறூஸ் மீது நேற்று மாலை கற்பிட்டி நுரைச்சோலை பிரதேசத்தில் வைத்து தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

கற்பிட்டி பிரதேசத்தில் தேர்தல் பிரசார நடவடிக்கையில் ஈடுபட்டுவிட்டு இடதுசாரி முன்னணியின் தலைவர் விக்ரமபாகு கருணாரத்ன மற்றும் ஆதரவாளர்களுடன் திரும்பிக்கொண்டிருக்கையில் நுரைச்சோலை பிரதேசத்தில் வைத்து சிலர் தன் மீது தாக்குதல் மேற்கொண்டதாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.'

தாக்குதலின்போது காயங்களுக்குள்ளான வேட்பாளர் கே.எம். பைறூஸ் தற்போது புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பில் எவரும் இதுவரைக் கைது செய்யப்படவில்லை எனத் தெரிவிக்கும் கற்பிட்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .