2025 ஜூலை 12, சனிக்கிழமை

புத்தளம் பெரிய பள்ளிவாசலுக்கு ஜனாதிபதி விஜயம்

Super User   / 2013 செப்டெம்பர் 18 , மு.ப. 05:07 - 0     - {{hitsCtrl.values.hits}}



-எம். எஸ். முஸப்பிர்


ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று செவ்வாய்க்கிழமை புத்தளம் பெரிய பள்ளிவாசலுக்கு விஜயம் செய்துள்ளார்.

புத்தளம் பெரிய பள்ளிவாசலுக்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் விஜயம் செய்த கண்டிய மன்னனினால் பள்ளிவாசலுக்கு அன்பளிப்புச் செய்யப்பட்ட பொருட்களையும் பார்வையிட்ட ஜனாதிபதி, பள்ளிவாசலின் விருந்தினர் குறிப்பெட்டிலும் கையொப்பமிட்டார்.

பெரிய பள்ளிக்கு வருகை தந்த ஜனாதிபதியை பள்ளிவாசலின் தலைவர் எஸ்.ஆர்.எம்.முஸம்மில், புத்தளம் மாவட்ட ஜம்மியத்துல் உலமா சபைத் தலைவர் அப்துல்லாஹ் மஹ்மூத் ஆலிம், புத்தளம் மாவட்ட காதி நீதிபதி மௌலவி நெய்னா முஹம்மத் ஆகியோர் வரவேற்றனர்.

ஜனாதிபதியுடன் புத்தளம் நகர சபைத் தலைவர் கே.ஏ.பாயிஸும் சமூகமளித்திருந்தார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவே புத்தளம் பெரிய பள்ளிவாசலுக்கு  முதற் தடவையாக விஜயம் செய்த ஜனாதிபதி என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, புத்தளம் மாவட்ட முஸ்லிம்களுடன் சந்திப்பொன்றையும் ஜனாதிபதி மேற்கொண்டார். இதன்போது புத்தளம் பெரிய பள்ளிவாசலின் தலைவர் எஸ்.ஆர்.எம்.முஸம்மில், புத்தளம் மாவட்ட ஜம்மியத்துல் உலமா சபைத் தலைவர் அப்துல்லாஹ் மஹ்மூத் ஆலிம் ஆகியோர் ஜனாதிபதிக்கு நினைவுச் சின்னம் வழங்கியமை குறிப்பிடத்தக்கது.






You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .