2025 மே 14, புதன்கிழமை

அதிபரின் கன்னத்தில் அறைந்த சமுர்த்தி அதிகாரி

Kanagaraj   / 2013 செப்டெம்பர் 18 , மு.ப. 06:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

சமுர்த்தி அதிகாரியொருவர் அதிபரின் கன்னத்தில் அறைந்த சம்பவமொன்று சிலாபத்தில் இடம்பெற்றுள்ளது.

சம்பவத்திற்கு இலக்கான சிலாபம் சவரான முஸ்லிம் வித்தியாலயத்தில் அதிபர் எஸ்.ஏ.எம்.ஸ்மையில்(51) வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வகுப்பறையில் சத்தம்போட்டுக்கொண்டிருந்த மாணவனை அந்த பாடசாலையின் அதிபர் பாடசாலை வளாகத்திலுள்ள புளியமரத்திற்கு கீழ் கொட்டிகிடக்கின்ற இலைகுலைகளை கூட்டுமாறு பணித்துள்ளார்.

இந்நிலையில் அந்த மாணவனின் தந்தையான சமுர்த்தி அதிகாரியே அதிபரின் கன்னத்தில் அறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த சமுர்த்தி அதிகாரி ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வடமேல் மாகாண சபையின் வேட்பாளருடன் பாடசாலைக்கு வருகைதந்து தேர்தல் பிரசார நடவடிக்கையில் ஈடுபடவிருந்தது தொடர்பில் பொலிஸ் மற்றும் தேர்தல்கள் திணைக்களத்திடம் முறைப்பாடும் செய்யப்பட்டுள்ளது. அதன் அடிப்படையிலேயே அதிபர் மீது  தாக்குதல் மேற்கொள்ளப்பட்டிருக்காலம் என்று தெரிவிக்கப்படுகின்றது.

தனது மகனுக்கு அதிபர் தண்டனை வழங்கியுள்ளதாக குறித்த சமுர்த்தி அதிகாரி பொலிஸில் முறைபாடு செய்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

You May Also Like

  Comments - 0

  • ibnuaboo Wednesday, 18 September 2013 01:15 PM

    மாதா பிதா குரு தெய்வம் என்பது பழைய கதையாகிவிட்டது. நேற்று ஒருத்தன் முழங்காலில் நிற்க வைத்தான். இன்று ஒருவன் கன்னத்தில் அரைந்தான். நாளை எவன் என்ன செய்யப் போகிறானோ?. பாவம் இந்த ஆசிரிய சமூகம். இத்தகைய காரியங்களுக்காக கடுமையான தண்டனை அறிமுகப்படுத்தப்பட வேண்டும்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .