2025 மே 15, வியாழக்கிழமை

மேர்வினின் திடீர் விஜயத்தால் ஐ.தே.க பிரசார கூட்டத்தில் பதற்றம்

Menaka Mookandi   / 2013 செப்டெம்பர் 19 , மு.ப. 07:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.முஸப்பிர்

வென்னப்புவ, வைக்கால் பிரதேசத்தில் இடம்பெற்ற ஐக்கிய தேசிய கட்சியின் இறுதி தேர்தல் பிரசாரக் கூட்டத்துக்கு பொதுமக்கள் தொடர்பாடல் அமைச்சர் மேர்வின் சில்வா வருகை தந்ததால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் இந்நிலைமையானது பொலிஸாரின் தலையீட்டினால் தவிர்க்கப்பட்டுள்ளது.

வடமேல் மாகாண சபைத் தேர்தலுக்கான இறுதி பிரசாரக் கூட்டம் நேற்று இரவு எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய தேசியக் கட்சித் தலைவருமான ரணில் விக்ரமசிங்க தலைமையில் இடம்பெற்றுக்கொண்டிருந்துள்ளது.

இக்கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஸி சேனாநாயக்கா உரையாற்றிக் கொண்டிருந்த வேளை அவ்விடத்தைத் தாண்டி பிரமுகர்களின் வாகனத் தொடரணியொன்று சென்றுள்ளது.

அத்துடன் அவ்வாகனத் தொடரணியில் சென்ற ஒரு வாகனம் அவ்விடத்தில் திடீரென நின்றதை அடுத்து அவ்வாகனத்திலிருந்து இறங்கிய அமைச்சர் மேர்வின் சில்வா 'யார் கூக்குரலிட்டது? யாரைப் பார்த்துக் கூக்குரலிடப்பட்டது?' என அங்கிருந்தோரைப் பார்த்து கேட்டுள்ளார்.

இதைக் கேட்ட ஒருவர் 'நாங்கள் யாரும் கூக்குரலிடவில்லை. நாங்கள் கை தட்டிக் கொண்டிருந்தோம்' என கூறியுள்ளார்.

எனினும் அமைச்சர் அங்கிருந்து செல்லாமல் நின்ற போது அங்கிருந்தோர் அமைச்சரைப் பார்த்து கூச்சலிடத் தொடங்கியுள்ளனர்.

இதனையடுத்து நிலைமை மோசமாவதை உணர்ந்து கொண்ட அவ்விடத்தில் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸாரும், அமைச்சரின் பாதுகாப்பு பிரிவினருமட அமைச்சரை அங்கிருந்து அழைத்துச் சென்றுள்ளனர்.

You May Also Like

  Comments - 0

  • VALLARASU.COM Thursday, 19 September 2013 02:54 PM

    ஐயா வந்தது எதற்கு தெரியுமா? ரோசி அக்காவை பார்க்கையாமே...

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .