2025 ஜூலை 09, புதன்கிழமை

வாக்காளர் அட்டைகளை கிழித்துவீசி தேர்தலை புறக்கணித்த வாக்காளர்கள்

Kanagaraj   / 2013 செப்டெம்பர் 21 , மு.ப. 11:39 - 0     - {{hitsCtrl.values.hits}}


வாக்காளர் அட்டைகளை கிழித்துவீசிய வாக்காளர்கள்  தேர்தலை புறக்கணித்த சம்பவமொன்று புத்தளம் மாவட்டத்தில் இடம்பெற்றுள்ளது.

புத்தளம், ஆனமடுவ பால்கம மற்றும் கவவேலந்த ஆகிய இரண்டு கிராமங்களைச்சேர்ந்தவர்களே தங்களுடைய வாக்காளர் அட்டைகளை கிழித்தெறிந்து வாக்களிப்பை புறக்கணித்தனர்.

இந்த இரு கிராமங்களையும் சேர்ந்தவர்களுக்கு பாலகம சனசமூக நிலையத்திலேயே கடந்த பலவருடங்களாக வாக்குச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது. இம்முறை அந்த வாக்குச்சாவடி கிராமங்களிலிருந்து இரண்டு கிலோமீற்றருக்கு அப்பாலுள்ள ஆனமடுவ சனசமூக நிலையத்தில் அமைக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்தே அந்த கிராமங்களின் மக்கள் வாக்களிப்பை புறக்கணித்துள்ளனர்.

அந்த கிராமங்களைச்சேர்ந்த சுமார் 600 வாக்காளர்கள் தங்களுடைய வாக்குகளை இன்று சனிக்கிழமை அளிக்கவில்லை என்று தெரிவிக்கப்படுகின்றது.







You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .