2025 ஓகஸ்ட் 25, திங்கட்கிழமை

புத்தளத்தில் பதற்றம்: தேர்தல்கள் ஆணையாரும் விஜயம்

Kanagaraj   / 2013 செப்டெம்பர் 24 , பி.ப. 05:04 - 0     - {{hitsCtrl.values.hits}}


வடமேல் மாகாண சபைக்கான தேர்தலின் போது புத்தளம் மாவட்டத்தில் வாக்களிக்கப்பட்ட வாக்குச்சீட்டுக்கள் மீட்கப்பட்டுள்ளதையடுத்து அங்கு பதற்றமான நிலைமையொன்று ஏற்பட்டுள்ளது.

புத்தளம் சென். அன்ருஸ் கல்லூரியிலிருந்தே இந்த வாக்குச்சீட்டுக்கள் மீட்கப்பட்டுள்ளன. இந்த கல்லூரி வாக்கெண்ணும் நிலையமாக இருந்தமை குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பான விசாரணைகளை மேற்கொள்வதற்காக புத்தளம் மாவட்ட செயலாளர் குறித்த இடத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்தார். எனினும், அங்கு பதற்றமான நிலைமையொன்று ஏற்பட்டதையடுத்து தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரியவும் ஸ்தலத்திற்கு விரைந்து இந்த சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை மேற்கொள்ளவிருப்பதாக அறிவித்துள்ளார்.

எனினும், வாக்குச்சீட்டுகள் மீட்கப்பட்டமையினால் ஏற்பட்ட பதற்றம் இன்னும் தொடர்வதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர்கள் தெரிவித்தனர்.


  Comments - 0

  • VALLARASU.COM Wednesday, 25 September 2013 06:34 AM

    ஐயா... இதெல்லாம் ஜுஜுப்பி...

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X