2025 மே 14, புதன்கிழமை

தேர்தலை மீள நடத்தக் கோரி உண்ணாவிரதம்

Super User   / 2013 செப்டெம்பர் 25 , மு.ப. 04:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.என்.எம்.ஹிஜாஸ்

மாகாண சபை தேர்தலை மீண்டும் நடத்துமாறு கோரி உண்ணாவிரத போராட்டமொன்று இன்று புதன்கிழமை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

வடமேல் மாகாண சபைக்கான தேர்தலின்போது புத்தளம் மாவட்டத்தில் வாக்களிக்கப்பட்ட வாக்குச்சீட்டுக்கள் நேற்று செவ்வாய்க்கிழமை மீட்கப்பட்டுள்ளன.

இதனையடுத்தே புத்தளம் மாவட்டத்திற்கான மாகாண சபை தேர்தலை மீண்டும் நடத்துமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த கோரிக்கையை முன்வைத்து புத்தளம் மாவட்ட செயலகத்திற்கு முன்பாக உண்ணாவிரத போராட்டம் இடம்பெறுகின்றது.

இந்த போராட்டத்தினை ஜனசெத பெரமுன மேற்கொண்டுள்ளது. இந்த உண்ணாவிரத போராட்டம் காரணமாக புத்தளம் மாவட்ட செயலகத்தின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த உண்ணாவிரத போராட்டத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் வேட்பாளர்களும் இணைந்துகொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.




You May Also Like

  Comments - 0

  • kamalraj Wednesday, 25 September 2013 09:09 AM

    மீண்டும் ஒரு தேர்தலை நடத்துவதற்கு தேவைப்படும் நிதி எங்கிருந்து வரும் மக்களின் பணமே தவிர எங்களதும் பணம் விரயமாவது...

    Reply : 0       0

    najeem Wednesday, 25 September 2013 09:23 AM

    என்ன செய்யலாம் முயற்சி பண்ணி பார்ப்பம்...

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .