2025 மே 15, வியாழக்கிழமை

வல்லுறவுக் குற்றச்சாட்டில் ஆசிரியர் கைது

Suganthini Ratnam   / 2013 செப்டெம்பர் 29 , மு.ப. 03:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.முஸப்பிர்

சிறுவன் ஒருவனை வல்லுறவுக்கு உட்படுத்தியதாகக் கூறப்படும்; சமய பாடசாலை ஒன்றின் ஆசிரியர் ஒருவரை நேற்று சனிக்கிழமை கைதுசெய்துள்ளதாக மாதம்பை பொலிஸார் தெரிவித்தனர்.

பௌத்த விகாரை ஒன்றில் சமய பாடம்  பயின்று வந்துள்ள நிலையில், அந்தப் பாடசாலையில் சமய பாடம் போதிக்கும் ஆசிரியர் ஒருவராலேயே இந்தச் சிறுவன் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டுள்ளான்.

தமது பிள்ளை இவ்வாறு வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டமை தொடர்பில் தெரிந்துகொண்ட இந்தச் சிறுவனின் பெற்றோர், இது தொடர்பில் மாதம்பை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர். இதனைத் தொடர்ந்து சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பான விரிவான விசாரணையை  மாதம்பை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .