2025 மே 14, புதன்கிழமை

நிரந்தர வைத்தியரை நியமிக்குமாறுகோரி ஆர்ப்பாட்டம்

Kogilavani   / 2013 ஒக்டோபர் 01 , மு.ப. 10:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.என்.எம். ஹிஜாஸ் 

புத்தளம், தபோவ கிராமிய வைத்தியசாலைக்கு நிரந்தர வைத்தியர் ஒருவரினை நியமிக்குமாறு கோரி கருவலகஸ்வெவ பிரதேச செயலகத்துக்கு முன்பாக பிரதேச மக்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

குறித்த வைத்தியசாலையில் கடமையாற்றிய வைத்தியர் இடமாற்றம் பெற்று சென்றதினால் கடந்த ஒரு வாராமாக வைத்திய சேவைகள் நடைடபெறாததினையடுத்து பிரதேச மக்கள் இவ் ஆர்ப்பாட்டத்pல் ஈடுப்பட்டனர்.

இதனையடுத்து அங்கு வந்த சிரேஸ்ட அமைச்சர் மில்ரோய் பெர்ணான்டோ, நாடாளுமன்ற உறுப்பினர் அருந்திக பெர்ணான்டோ, புத்தளம் மாவட்ட வைத்திய அத்தியட்சகர், கருவலகஸ்வெவ பிரதேச செயலாளர் ஆகியோர் கலந்துரையாடி ஆர்ப்பாட்டக்காரர்களிடம் எதிர்வரும் 07ம் திகதி தொடக்கம் தப்போவ வைத்தியசாலைக்கு நிரந்தர வைத்தியர் ஒருவரினை நியமிப்பதாக கூறியதினையடுத்து ஆர்ப்பாட்டம் முடிவுக்கு வந்தது


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .