2025 டிசெம்பர் 20, சனிக்கிழமை

இளம் தாய் கடத்தப்பட்டு வல்லுறவு; சந்தேக நபரை கைதுசெய்ய ஏற்பாடு

Suganthini Ratnam   / 2013 ஒக்டோபர் 04 , மு.ப. 03:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.முஸப்பிர்

வான் ஒன்றில் இளம் தாய் ஒருவரை கடத்திச்சென்று  வல்லுறவுக்கு உட்படுத்திய சம்பவத்துடன் தொடர்புடையதாகக் கருதப்படும் ஒருவரை கைதுசெய்வதற்கான நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக சிலாபம் பொலிஸார் தெரிவித்தனர். 

சிலாபம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியைச் சேர்ந்த இளம் தாய் ஒருவரே இவ்வாறு வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
தனது கணவர் வெளிநாட்டில் தொழில் புரிந்து வருகின்றார்.

சம்பவதினம் தேவை ஒன்றின் நிமித்தம் தான் சிலாபம் நகருக்குச் சென்றபோது அங்கு தன்னைப் பின்தொடர்ந்து வந்த சந்தேக நபர், தன்னைப் பலவந்தமாக வான் ஒன்றில் கடத்திச் சென்று தன்னை வல்லுறவுக்கு உட்படுத்தியதாக  சிலாபம் பொலிஸ் நிலையத்தில் பாதிக்கப்பட்ட பெண் நேற்று வியாழக்கிழமை முறைப்பாடு செய்துள்ளார்.

சிலாபம், பண்டாரவத்தைப் பிரதேசத்தில் அமைந்துள்ள தங்குமிடம் ஒன்றிற்கு கொண்டு சென்று அங்கு வைத்து தன்னை வல்லுறவுக்கு உட்படுத்தியதாகவும் பாதிக்கப்பட்ட பெண் தனது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.

இந்தச் சம்பவத்துடன் தொடர்புடையதாகக் கருதப்படும் சந்தேக நபரை பாதிக்கப்பட்ட பெண் அடையாளம் கண்டுள்ளார்.  இந்த நிலையில், சந்தேக நபரைக் கைதுசெய்வதற்கான  விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X