2025 டிசெம்பர் 20, சனிக்கிழமை

தொழிற்சாலை ஊழியர்கள் கூரையின் மேல் ஏறி போராட்டம்

Super User   / 2013 ஒக்டோபர் 08 , பி.ப. 12:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.என்.எம். ஹிஜாஸ்

நவகத்தேகம, வெலவேவ ஆடைத் தொழிற்சாலை ஊழியர்கள் தொழிற்சாலை கூரையின் மேல் ஏறி சத்தியாகிரக போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.

குறித்த ஆடைத் தொழிற்சாலையின் ஊழியர்களுக்கு கடந்த இரண்டு மாதங்களாக கொடுப்பனவு வழங்கப்படவில்லை என தெரிவித்து, அத்தொழிற்சாலையில் கடமை புரியும் ஆண்களும் பெண்களும் தற்போது சத்தியாகிரகத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.

இவ்வாறு சத்தியாகிரகத்தில் ஈடுப்பட்டுள்ளவர்களில் சுமார் 20 ஊழியர்கள் வரை தொழிற்சாலையின் கூரை மேல் அமர்ந்து எதிர்ப்பினை தெரிவித்து வருகின்றனர். குறித்த தொழிற்சாலையில் சுமார் 200 பேர் வரை கடமையாற்றுவாக பொலிஸார் தெரிவித்தனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X